சுந்தரி இராமநாதன் அவர்களின் தங்கை மகளான ப்ரியா சில தினங்களாக தொடர்பில் இருந்து வருகிறார். இணைய கலந்துரையாடலின் போது பல புது விஷயங்களை சொன்னார். மண்டலா கருத்தாக்கம் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். அவர் கூறிய செய்தி எனக்கு புதிதாக இருந்ததாலும், நமது இந்திய பாரம்பரியத்தோடு தொடர்புடைய செய்தி என்பதாலும் மண்டலா கருத்தாக்கத்தைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. இணையத்தில் தேடியதில் சில தகவல்கள் கிடைத்தன.
இது ஆன்மாவை நெறிப்படுத்தும் கலை. குறிப்பிட்ட வகையான ஓவியத்தின் வழியாக உள்ளத்தை நெறிப்படுத்தும் கலை. சுருங்க சொன்னால் இது ஒரு வகையான தியானத்தைப் போன்றது! மண்டலா முறைப் பற்றிய விழிப்புணர்வு சில மேற்கத்திய நாடுகளில் அதிகம் இருப்பதாகவும், அதை அவர்கள் வியாபார நோக்கோடு செயல்படுத்துவதாகவும் ப்ரியா வருத்தப்பட்டார். அடுத்த வாரம் தன்னுடைய சித்தியின் பிறந்தநாள் வருவதால்,பிறந்தநாள் பரிசாக அழகான பூவேலைப்பாடுடன் கூடிய பொருள் ஏதாவது கொடுக்க விருப்பப்படுவதாக சொன்னார். படுக்கை விரிப்பில் பூத்தையல் செய்து கொடுக்கலாம் என்று முடிவு செய்தோம்.
ப்ரியாவின் தேவைகளை குறித்து கொண்டு கோ-ஆப்டெக்சில் படுக்கை விரிப்பையும், ரெங்கநாதன் தெருவில் பூவேலைக்கு தேவையான நூல்களையும் வாங்கினேன். நமது கலாச்சாரம்,தியானம் போன்றவற்றில் ப்ரியாவின் ஈடுபாட்டை நினைவில் கொண்டு அதற்கு தகுந்தாற் போல் வடிவ படிமம் தயார் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன். ஆதிவாசிகள் கை கோர்த்துக் கொண்டு நிற்பது போன்றும், அவர்களுக்கு நடுவே வட்ட வடிவ படிமத்தில் குறுக்கும் நெடுக்குமாக இரண்டு திசைகளிலிருந்து வரும் கோடுகள் நடுப் புள்ளியில் சந்திப்பது போலவும் வடிவ படிமம் தயார் செய்யப்பட்டது.
வட்ட வடிவம் பூமியை குறிக்கிறது. அதற்குள் இருக்கும் எதிர் எதிர் திசையிலான கோடுகள் மனிதர்களிடையே இருக்கும் மொழி,கலாச்சாரம்,நிறம் போன்ற வேற்றுமைகளை குறிக்கவும்,மனித உருவங்கள் கை கோர்த்து கொண்டு இருப்பது ஒற்றுமையின் அவசியத்தை உணர்த்தும் விதமாகவும் வரையப்பட்டது.
இதை விரிப்பின் நான்கு ஓரத்திலும், மீதம் உள்ள இடங்களில் ஆங்காங்கே நமது கிராமங்களில் இருக்கும் கூரை வீடு இருப்பது போன்ற படிமம் தயார் செய்யப்பட்டது.
அடுத்ததாக படிமத்தை விரிப்பில் அச்சு எடுக்கப்பட்டது.
விரிப்பின் நிறத்திற்கு ஏற்ப 8 வகையான வண்ண நூல்களை தேர்வு செய்து, அதிலிருந்து கடைசியாக 4 வண்ணங்களை பயன்படுத்த முடிவு செய்தோம்.
கூரை வீட்டிற்கு பயன்படுத்திய நிறம் திருப்தி தராததால் அவற்றை பிரித்து விட்டு வேறு நிற நூல் தேர்வு செய்யப்பட்ட்து.
வண்ண நூல்களின் துணை கொண்டு அழகான வீட்டை உருவாக்கினோம்.
முற்றுப் பெற்ற படிமத்தை கீழே இணைத்துள்ளேன்.
படிம வடிவத்தின் மூலம் – திருமதி இராணி,ஈசா தியான மையம், கோவை.



2 கருத்துரைகள்:
அருமையான பதிவு, இப்படியான விசயங்கள் இணையத்தில் இவ்வளவு விளக்கமாக கிடைப்பது அரிது. வாழ்த்துகள்
@Thenie
நன்றி தேனீ...
Post a Comment